farmers arrested connection Tanjore Air Force demanding Cauvery Board
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.
காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை அமைக்க வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் இந்திய உயர்நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரியது.
இதனால் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சாவூரிலுள்ள விமான படை தளத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மணியரசன் தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களிடம் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும் அவர்கள் கேட்காததால் விவசாயிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது மோடியின் உருவபொம்மை மற்றும் இந்திய மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் உருவபொம்மையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவஜத்துள்ளனர்.
farmers arrested connection Tanjore Air Force demanding Cauvery Board
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com