(Two arrested foreign currency notes)
இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத் தாள்களை கடத்த முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த குறித்த இருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் சுமார் 72 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையில் மறைத்து சிங்கப்பூருக்கு எடுத்து செல்ல முற்பட்டபோதே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்களின் பெறுமதி ஒரு கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 30 வயதுடைய ஆணொருவரும் 55 வயதுடைய பெண்ணொருவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரிடம் சுங்கத்திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்:டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
More Tamil News
- வடமாகாணத்தில் 951 விபத்துக்கள் ; 16 பேர் பலி
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Two arrested foreign currency notes