நினைவேந்தலுக்கான இழுபறியில் சின்னாபின்னமாகும் தமிழ்த்தேசிய உணர்வு!

0
1289
Mullivaikkal Memorial Day Tamil Political Parties Make Complex Issue

(Mullivaikkal Memorial Day Tamil Political Parties Make Complex Issue)

இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தம் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மறக்க முடியாத அழிவுகளை கொடுத்த ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அந்த அழிவுகள் கொடுத்த வலிகளின் வடுக்களில் இருந்து மீள திராணியற்றவர்களாக வாழும் காலம் முழுவதும் அதன் நினைவுகளை சுமந்தவர்களாக நடைப்பிணமாக வாழும் மக்கள் மனதில் இன்றைக்கும் அந்த நாட்களின் கோர நினைவுகள் குடிகொண்டிருக்குறது.

ஆனாலும் வலிகளை புரிந்து கொண்டவர்களாக, உறவுகளை இழந்த சொந்தங்கள் தம்மால் இயன்றளவு செய்யகூடிய நினைவேந்தல் நிகழ்வுகள் அன்று தொடக்கம் இன்று வரை அரசியல் சார்பு தரப்புகளால் சர்சைக்குரியவையாகவே இருந்து வருகின்றது.

எந்தெந்த தரப்புகள் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கு பற்ற முடியும் என்பது தொடக்கம் அனைத்து விடயங்களுமே அரசியல் கலப்பாகவே உள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட கூடிய நினைவேந்தலை , முற்றிலும் அரசியல் மயப்படுத்தும் வண்ணம் அரசியல் கட்சிகளின் கைகளில் தார வார்த்து கொடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவது மிகவும் கவலைக்குரியது.

மே 18 இது ஒரு எழுச்சி நாளோ அல்லது அரசியல் முழக்கமிடும் நாளோ கிடையாது. கொடிய போரில் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட மக்களின் வலிகளை நினைவு கூறும் மிகவும் உணர்வு பூர்வமான நாள்.

இத்தகைய ஒரு நாளை அரசியல் மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் வரவேற்கதக்கதல்ல. உண்மையில் இந்த நாளை ஒருமித்த இன உணர்வோடு அனுஸ்டித்தலே இறுதிப்போரில் மாண்டு போன ஆன்மாக்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும்.

அதுமட்டுமன்றி வெறும் நினைவேந்தல்களுடன் நின்றுவிடாமல் , இறுதிப்போரின் இனவழிப்புக்கு நீதி கோரும் விசாரணைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடல் எமது இனத்தின் தலையாய கடமையாகும்.

 

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு