மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!

0
789
Thun Mahathir took responsibility, malaysia tamil news, malaysia, malaysia 14 election, malaysia election,

{ Thun Mahathir took responsibility }

மலேசிய நாட்டில் நேற்று நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் 124 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி மத்தியில் அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் இரவு மணி 10.30 அளவில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் முகமட் வி யை சந்தித்து நாட்டின் 7ஆவது பிரதமராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

இம்முறை பொதுத்தேர்தலில் தீபகற்ப மலேசியாவில் பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிட்ட நம்பிக்கைக் கூட்டணி 104 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில் பத்து தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனுக்கு ஆதரவளித்து அவரை வெற்றி பெற செய்துள்ளது.

சபா, சரவாக்கில் வாரிசான் 8 தொகுதிகளையும் ஜ.செ.க. 9 தொகுதிகளையும் சுயேட்சையாக 3 தொகுதிகளையும் வென்று ஆட்சியை அமைக்கின்றது.

இந்த வெற்றியின் வாயிலாக, சுதந்திர காலம் முதல் நாட்டை ஆண்டு வந்த தேசிய முன்னணியை ஆட்சியிலிருந்து அகற்றி வரலாற்றை பதிவு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா, நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களான டத்தோஸ்ரீ வான் அசிஸா, டான்ஸ்ரீ முகைதீன் யாசின், லிம் குவான் எங், முகமட் சாபு ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

Tags: Thun Mahathir took responsibility

<< TODAY MALAYSIA NEWS>>

*சரித்திரம் படைத்திருக்கும் மகாதீர் முகமதின் வெற்றியை நகைச்சுவைத் துணுக்குகள் மூலம் கொண்டாடும் மக்கள்!

*மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!

*இன்றே புதிய பிரதமரை நியமியுங்கள்: ஜொகூர் சுல்தான் வலியுறுத்து

*ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்

*இன்று மாலை 5- மணிக்குள் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்! மகாதீர் கோரிக்கை..

*கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் வெற்றி..!

*மலேசியாவில் மே-10-11 ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை!

*தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி..!

<<Tamil News Groups Websites>>