காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததன் பின்னணியில் அரசியல் உள்ளது – கமல்ஹாசன்

0
618
Peoples Judicial recognized Election Commission political party

There political behind Cauvery Management Board

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததன் பின்னணியில் அரசியல் உள்ளது’ என்று சென்னையில் நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்களின் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகம் கடந்த 15 ஆண்டுகளாக ஆரோக்கியமாக இல்லை. குறிப்பாக கடனில் தத்தளித்து வருகிறது. நான் அதிகாரத்திற்கு வந்தால் தொழில் வளம் மேம்படுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், தொழிலதிபர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை கருத்தில் கொள்வேன்.

சிறு தொழில் முனைவோர்கள் தான் தமிழகத்தின் ஜீவாதாரமாகும். அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியை பெற முடியும். காவிரி பிரச்சினையில் அரசியல் விளையாடுவதால் தான் அதற்கு தீர்வு ஏற்படவில்லை. அரசியலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 2 மாநில விவசாயிகளிடம் இப்பிரச்சினையை கொடுத்துவிட்டால் உடனடியாக தீர்வு ஏற்பட்டு விடும்.

காவிரி பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணவும் முடியும். மத்தியில் கூட்டாட்சி தான் வேண்டும். மாநிலத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால் மாநில உரிமைகளைப் பாதுகாக்க கூட்டாட்சி தேவைப்படுகிறது.

அரசியலில் வென்றாலும், தோற்றாலும் அரசியலில் நீடிப்பேன். வெற்றி பெற்றுதான் ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே அரசியலுக்கு நான் வரவில்லை. பொறியியல் படித்தவர்கள் கூட பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிடுகின்றனர்.

வேலை அளிப்பவர்களின் தேவைக்கு ஏற்ப இளைஞர்களுக்கு தொழில் திறன்களை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இதுவரை சினிமா துறையில் உழைத்து பல்வேறு சாதனைகள் படைத்து விட்டேன். இனி மீதம் உள்ள காலத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்வது தான் என்னுடைய வாழ்க்கையாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

There political behind Cauvery Management Board