வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு

0
953
Northern Provincial Council Confusion

(Former Northern Province Health Minister innocence)
வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் குற்றமற்றவர் என்றும் அவர் மீது சபையில் எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறிய கருத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர் வி. தவநாதன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

வட மாகாண சபையின் 122 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது, வடமாகாண சபையின் 120 ஆவது அமர்வில் முன்னாள் அமைச்சர் ப. சத்தியலிங்கம் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பதில் வழங்கியிருந்தார்.

முதலமைச்சர் தனது பதிலில் சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராக இருந்து பதவி விலகும் போது 750 அமைச்சு சார்ந்த கோவைகளை எடுத்து சென்றதாக அறிந்தேன். பின்னர் அந்த கோவைகள் மீள கொண்டுவந்து வைக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.

அதனடிப்படையிலேயே ஊடகங்களுக்கு கருத்து கூறியிருந்தேன். ஆனால் ஊடகங்கள் கோவையை சத்தியலிங்கம் எடுத்து சென்றார் என செய்தியைப் பிரசுரித்தன. கோவைகள் திரும்பி வந்துவிட்டன என செய்தியை பிரசுரிக்கவில்லை. ஆகவே ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து பேசியப் பயனில்லை என்றும் கூறியிருந்தார்.

இதனையடுத்து, சபையில் கருத்து தெரிவித்த அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், முன்னாள் அமைச்சர் ப. சத்தியலிங்கம் குற்றமற்றவர் அவர் மீது சபையில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் கூறினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன்,

சத்தியலிங்கம் சுகாதார அமைச்சு சார்ந்த கோவைகளை எடுத்து சென்றதாக முதலமைச்சர் கூறினார். பின்னர் அந்த கோவைகள் திரும்பிவிட்டதாகவும் கூறினார்.

ஆகவே ஒரு அமைச்சு சார்ந்த கோவைகளை அமைச்சர் பதவி விலகும் போது எடுத்து செல்வது குற்றம் இல்லையா?

மேலும், சத்தியலிங்கம் குற்றமற்றவர் என்றால் மிகுதி 3 அமைச்சர்கள் குற்றவாளிகளா? சுற்றவாளிகளா? என கேள்வி எழுப்பினார். ஆனாலும் எதிர்கட்சி உறுப்பினர் வி. தவநாதனின் கேள்விக்கு இறுதிவரை சரியான பதில் கொடுக்கப்படவில்லை.

இறுதியாக கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன் கூறுகையில், சுகாதார அமைச்சின் கோவைகள் எடுக்கப்படுவதாக முதலமைச்சருக்கு கூறியவள் என பேச தொடங்கி பின்னர் கூறியவர் என மாற்றிய சுகிர்தன், முதலமைச்சருக்கு கூறிய மண்டை கழண்டதை தெல்லிப்பளையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Former Northern Province Health Minister innocence