பேராசிரியை நிர்மலாதேவியின் பிணை மறுப்பு!

0
639
Sriniviliputur summer court dismissed Nirmaladevi petition professor

Sriniviliputur summer court dismissed Nirmaladevi petition professor

தமிழகத்தின் தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி பிணை மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் கோடைக்கால நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தின் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக உயரதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு தொலைபேசி மூலம் அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி   பிணை  வழங்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். நிர்மலாதேவி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டத்தரணிகளான ராமநாதன், மகாலிங்கம் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

இம்மனு நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, நிர்மலா தேவியின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, இதே நீதிமன்றத்தில் கடந்த வாரம் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Sriniviliputur summer court dismissed Nirmaladevi petition professor

more Time Tamil News Today

Time Tamil News Group websites :