(rajasthan royals vs Chennai super kings 2018 news Tamil)
ஐ.பி.எல்.தொடரில் இக்கட்டான நிலையில் இருக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இன்று களமிறங்குகிறது.
இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 14 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்புடன் இந்த போட்டியில் விளையாடவுள்ளது.
சென்னை அணிக்கு இந்த போட்டியை தவிர 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அதில் ஒன்றில் வெற்றிபெற்றாலும் பிளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளை மாத்திரமே பெற்றுள்ளது.
இதனால் எதிர்கொள்ளவுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதியாக தக்கவைக்க முடியும். இதனால் இன்றைய போட்டியானது சென்னை அணியை விடவும், ராஜஸ்தான் அணிக்கே முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.
தொடர்ச்சியான தோல்விகளுக்கு முகங்கொடுத்து வந்த ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி, வெற்றி பாதைக்குள் நுழைந்துள்ளது. இதனால் அணியை வலிமையாக கொண்டு செல்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
சென்னை அணியை பொருத்தவரையில் இம்முறை 3 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது. பலமான அணியாக திகழ்ந்து வரும் சென்னை அணியின் துடுப்பாட்டம் அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.
எனினும் பந்து வீச்சில் சற்று தடுமாறி வருவதால், இன்று பந்து வீச்சில் விட்ட தவறுகளை திருத்தி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும், இதேவேளை ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால் பிளே-ஆஃப் சுற்றின் வாய்ப்பை இழக்க நேரிடும்.
இதனால் இன்றயை போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.
<<Tamil News Group websites>>
rajasthan royals vs Chennai super kings 2018 news Tamil, rajasthan royals vs Chennai super kings 2018 news Tamil