பொது மக்களின் உதவியை நாடிய காவற்துறை- இளம்பெண் கடத்தல்!

0
608

Barbezieux-Saint-Hilaire இலுள்ள ஒரு பள்ளியின் முன் இளம் பெண் ஒருவரைக் கடத்திச் செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒரு மனிதரின் மாதிரிபடம் ஒன்று Charente ஐச் சேர்ந்த பொலிஸ் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது.Police ask help abduction attempt

குறித்த சந்தேக நபர் 40 வயதுக்குட்பட்டவராகவும், சராசரியாக கட்டியெழுப்பப்பட்ட, வளைந்த உருவமைப்பை கொண்டவர் எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இடம்பெற்ற நாளில், இருண்ட சாம்பல் நிற, பெரிய கட்டம் போட்ட டி-ஷர்டை அணிந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

இந்தக் கடத்தல் சம்பவம் இவ் வார ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இளம்பெண்ணை அவரது சாம்பல் நிற Peugeot 207 என்ற காரினுள் இழுக்க முயற்சித்த போது, இன்னுமொரு நபர் வந்த காரணத்தினால் அப் பெண்ணை விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

காவற்துறையினர், Charente மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தெற்கு Charente-Maritime பகுதி, வடக்கு Gironde மற்றும் மேற்கு Dordogne பகுதிகளை சேர்ந்தவர்களை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்களை 05 45 78 17 49 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு காவற்துறை தெரிவித்துள்ளது.

Police appeal over abduction attempt

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**