அரையிறுதியில் சொந்த நாட்டு வீராங்கனையை எதிர்கொள்ளும் பிலிஸ்கோவா

0
591
Madrid Open 2018 karolina pliskova news Tamil today

(Madrid Open 2018 karolina pliskova news Tamil today)

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிக்கு செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவா தகுதிபெற்றுள்ளார்.

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற காலிறுப்போட்டியில் பிலிஸ்கோவா, ரோமானிய வீராங்கனை சிமோனா ஹலீப்பை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய கரோலினா, 2-0 என்ற நேர் செட்கள் கணக்கில் இலகு வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய பிலிஸ்கோவா, இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பிலிஸ்கோவா அரையிறுதிப்போட்டியில் தனது சொந்த நாட்டு வீராங்கனை பெட்ரா கிவிடோவாவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>