{ Kedda Minister Basu take office today }
மலேசியா, கெடா மாநில மந்திரி புசாரின் பதவிப் பிரமாணம், ‘சுல்தான் சலேவுதின் சுல்தான் பட்லீஷாவின் சம்மதத்தை பெற்ற பின்னர் இஸ்தானா அனாக் புக்கிட்டில் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கெடாவில் பிகேஆர் சின்னத்தைக் கொண்டு போட்டியிட்ட பக்காத்தான் ஹராப்பான் கட்சி, 36 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்றுள்ளது.
இதுவரை யார் கெடா மாநில மந்திரி புசாராக பதவியேற்பார் என்பது புதிராகவே இருப்பினும் டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் கெடா மாநிலத்தின் மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என நம்பப்படுகின்றது.
இந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிட்ட பக்காத்தான் ஹராப்பான் 8 சட்டமன்றத் தொகுதிகளையும், பிரிபூமி பெர்சத்து 5 தொகுதிகளையும், அமானா நெகாரா 3 தொகுதிகளையும் ஜ.செ.க 2 தொகுதிகளையும் வென்றுள்ளது.
மேலும், இத்தேர்தலில் கெடாவில் பாஸ் கட்சி 15 சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணி 3 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
Tags: Kedda Minister Basu take office today
<< TODAY MALAYSIA NEWS>>
*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!
*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!
*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!
*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!
*மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!
*இன்றே புதிய பிரதமரை நியமியுங்கள்: ஜொகூர் சுல்தான் வலியுறுத்து
*ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்
<<Tamil News Groups Websites>>