இந்திய பெண்ணுக்கு கூகுள் நிறுவனத்தில் ஒரு கோடி ஊதியம்

0
616
India million rupees year

Google working woman Bihar state India million rupees year

தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் ஆண்டுக்கு ஒரு கோடி இந்திய ரூபா ஊதியத்தில் இந்தியாவின்  பீஹார் மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு வேலை கிடைத்துள்ளது.

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள சன்பத்ரா என்ற பகுதியில் வசித்துவருகிறார் மதுமிதா ஷர்மா (வயது 25). இவர், ஜெய்ப்பூரில் உள்ள ஆர்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றவர்.

இந்நிலையில், சுவிச்ஸர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவன தொழில்நுட்பப் பிரிவில் கடந்த திங்கள்கிழமை பொறியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆண்டுக்கு ஒரு கோடி ரூபா சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அமேசான், மைக்ரோசொப்ட், மற்றும் மெர்சிடஸ் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களிலிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்தாலும் கூகுள் நேர்காணல் சுற்றில் கவனம் செலுத்திய மதுமிதா, ஏழு சுற்றுகளைக் கடந்து நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார்.

மகளுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பற்றி பகிர்ந்துகொண்ட அவரின் தந்தை சுரேந்திர் குமார் ஷர்மாஇ ஹமென்பொருள் துறையில் பல பெண்கள் சாதித்துவருகின்றனர். இருந்தாலும் பெண்களுக்கு ஏற்ற துறை இன்ஜினீயரிங் இல்லை என்று முதலில் மறுத்துவிட்டேன். படித்தால் இன்ஜினீயரிங்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து பி.டெக் படிப்பில் சேர்ந்தாள். இப்போது, அதை நினைக்கையில் மிகப்பெரிய தவறு செய்ய இருந்தேன்.  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய புத்தகங்கள், அவரது சுயசரிதைகளை விரும்பிப் படிக்கும் மதுமிதாவுக்கு அவருடைய எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி உத்வேகம் அளித்தன’ என்று குறிப்பிட்டு நெகிழ்ந்தார்.

மேலும், கூகுள் நிறுவனத்தின் முதல் நாள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மதுமிதா, ஹஎன்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையை மேம்படுத்துவதுக்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். கூகுள் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எனது கனவு தற்போது நிறைவேறியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

Google working woman Bihar state India million rupees year

More Time Tamil News Today

Time Tamil News Group websites :