‘வாழ்வொன்று என்றால் அது ஆர்யாவோடு தான்’ ஆர்யாவுடன் ரச்சு பண்ண துடிக்கும் சீதாலட்சுமி.

0
1996

(Enga Veedu Mappillai Seetha Lukshmi Crazy Aarya Talk)

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுடன் இன்னும் டச்சில் இருப்பதாக சீதாலட்சுமி தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில் இறுதி வரை வந்தவர் சீதாலட்சுமி.

இறுதிப்போட்டியின் போது, சீதாலட்சுமி, சுசானா, அகதா ஆகிய மூவரில் ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுத்திருக்க வேண்டியது. ஆனால் அவர் யாரையும் தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சி மற்றும் ஆர்யா குறித்து சீதாலட்சமி கூறியதாவது.. :-

”சும்மா தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்தேன். தேர்வு செய்யப்பட்டதும் லைட்டா டென்ஷனாகி விட்டது. இருந்தாலும் பரவாயில்லை முயற்சி செய்யலாம் என்று சென்றேன். அங்கு எனக்கு தெரிந்த ஸ்ரியாவை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.

அத்துடன், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் நன்றாக பழகினார்கள். எனக்கு கல்லூரி நாட்களை அது நினைவூட்டியது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் நாங்கள் அனைவரும் ஒருத்தர் மீது ஆர்வமாக இருந்தோம். முதலில் மேடை பயம் இருந்தது. ஆனால் அதன் பிறகு இல்லை.

முதலில் ஆர்யா, சங்கீதா மேடத்தை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல ஆர்யா மீது ஃபீலிங்க்ஸ் வந்துவிட்டது. பினாலேவில் நடந்ததை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. நான் ஆர்யாவை திருமணம் செய்யாவிட்டாலும் என் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தாரின் மதிப்பை பெற்றுள்ளேன்.

மேலும், ஆர்யாவை முதலில் நடிகராக மட்டுமே பார்த்தோம். பின்னர் அவர் எங்களில் ஒருவர் ஆகிவிட்டார். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தார்.

நான் அவரை இம்பிரஸ் செய்ய பெருமுயற்சி செய்தேன். அவர் என் மீது அக்கறை கொண்டிருந்தார். அவர் உண்மையாக நடந்து கொண்டார். நான் தவறு செய்தபோது கூட ஊக்குவித்தார்.

ஆர்யா யாராவது ஒரு பெண்ணை தேர்வு செய்வார் என்றே நினைத்தேன். அவர் தனது முடிவை அறிவித்ததும் எனக்கு குழப்பமாகி விட்டது. நான், அகதா, சுசானா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தோம். கேமராவுக்கு முன்னால் இதை ஆர்யாவால் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்தேன். அவரின் முடிவை மதிக்கிறேன்.

நான் இன்னும் ஆர்யாவுடன் டச்சில் தான் உள்ளேன். எதிர்காலத்தில் எங்களுக்கு இடையே ஏதாவது ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். நான் முதலில் அபர்ணதியை தவறாக புரிந்து கொண்டேன்.

அதன் பின்னர் தான் அவர் நல்லவர் என்பதை தெரிந்து கொண்டேன்” இவ்வாறு சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tag: Enga Veedu Mappillai Seetha Lukshmi Crazy Aarya Talk