{ Anwar apology Mahathir announcement }
மலேசியா, சிறைவாசம் அனுபவித்து வரும் அன்வார் இப்ராகிமிற்கு உடனடியாக முழு மன்னிப்பை வழங்க பேரரசர் ஐந்தாம் முகம்மட் இணக்கம் தெரிவித்துள்ளார் என்று பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.
அன்வாருக்கு முழுமையான மன்னிப்பு வழங்குவதற்கு தாம் ஒப்புக் கொள்வதாக ஜசெக பொதுச் செயலாளர் லிம் எங் குவானிடம் பேரரசர் கூறியதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் துன் மகாதீர் கூறியுள்ளார்.
அன்வாருக்கான பொது மன்னிப்பை முறைப்படி பெறுவதற்கான அதிகாரப்பூர்வ பணிகளை பக்காத்தான் அரசாங்கம் உடனடியாகத் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 7ஆவது பிரதமராக துன் மகாதீர் பொறுப்பேற்பதற்கு முன்னர் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் அனைவரையும் பேரரசர் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஓரினப் புணர்ச்சி வழக்கில் 2008ஆம் ஆண்டு அன்வார் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டில் அவர் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், 2014 ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டதை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: Anwar apology Mahathir announcement
<< TODAY MALAYSIA NEWS>>
*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!
*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!
*மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!
*இன்றே புதிய பிரதமரை நியமியுங்கள்: ஜொகூர் சுல்தான் வலியுறுத்து
*ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்
*இன்று மாலை 5- மணிக்குள் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்! மகாதீர் கோரிக்கை..
<<Tamil News Groups Websites>>