“வில்பத்துவின் உண்மை நிலையை கண்டறியுங்கள்” பொன்சேகாவிடம், ரிஷாட் வேண்டுகோள்!

0
552
tamilnews rishad badiyudeen request sarath fonseka vilpathu

(tamilnews rishad badiyudeen request sarath fonseka vilpathu)

வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதுமான இனவாதிகளின் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்ற புடைவைக் கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த பதிலை அளித்தார்.

வில்பத்துவில் ஓரங்குல நிலமேனும் முஸ்லிம்களால் அங்கீகரிக்கப்படவில்லை.

இது அப்பட்டமான பொய்யான கருத்தாகும்.

இது குறித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென்றே நாம் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கின்றோம்.

அமைச்சர் சரத் பொன்சேகா இந்த விவகாரம் தொடர்பில் கவனஞ்செலுத்துவார் என நம்புகின்றேன்.

எவராவது வில்பத்துக் காணியை அழித்திருந்தாலோ, அதில் குடியேறி இருந்தாலோ அவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவன் என்ற வகையில், நானும் பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இன்றைய தினம் தொடக்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஆடைத் தொழிற்துறை வழங்குனர்கள் கண்காட்சி (AISEX), சாதனங்கள் வழங்குனர் கண்காட்சி மற்றும் துணிவகை ஆகியன பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி கூடத்தில் இடம்பெறுகின்றன.

1998 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு தடவை இடம்பெற்று வருகின்ற AISEX & FASE 2018 இந்தமுறை 8 ஆவது தடவையாகவும் இடம்பெறுவதுடன் தொழிற்துறைியன் அபிவிருத்தி மீது கவனம் செலுத்தியுள்ள மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து பெரிய மற்றும் சிறிய தொழிற்பாட்டாளர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்துள்ளது.

ஆடைத்தொழிற்துறையின் பிரதான இயந்திரத் தளவாட வழங்குனர்கள் மற்றும் சேவை வழங்குனர்கள இக்கண்காட்சி நிகழ்வில் பங்குபற்றுகின்றனர்.

இலங்கையில் கிடைக்கப்பெறுகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பில் பார்வையாளர்கள் நேரடியாக கண்டு அனுபவங்களைக் கற்றுக்கொள்வதுடன் தொழிற்துறையில் செயற்படுகின்ற முக்கிய ஆளணியினரை சந்தித்து அவர்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது.

 

(tamilnews rishad badiyudeen request sarath fonseka vilpathu)

More Tamil News

Tamil News Group websites :