பிரான்ஸில், தமிழின அழிப்பிற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம்!

0
650
protest againstt Tamils destruction

தமிழின அழிப்பு நாளான மே18 ஐ முன்னிட்டு பரிஸின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான Alfortville நகரசபை முன்றலில் எதிர்வரும் 15.05.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற உள்ளது.protest againstt Tamils destruction

முள்ளிவாய்க்காலில் 2009 மே 18 இடம்பெற்ற தமிழின படுகொலைகளுக்கு நீதி கேட்டு ஒவ்வொரு வருடமும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் மே 15 ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற இருக்கிறது.

இதனை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பிராங்கோ தமிழ்ச் சங்கம் போன்றன ஏற்பாடு செய்துள்ளன.

தமிழ்ப்பற்றுள்ள அனைவரையும் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றுமாறு அழைக்கின்றனர்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**