ஒரே ஒரு வெற்றியை குறிவைத்து களமிறங்கும் ஹைதராபாத்!

0
562
delhi daredevils vs sunrisers hyderabad news Tamil

(delhi daredevils vs sunrisers hyderabad news Tamil)

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரண்டு அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், டெல்லி அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. எனினும் ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் வெற்றிபெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால் 18 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை உறுதிசெய்யும். டெல்லி அணி தோல்வியடைந்தால், பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றுமுழுதாக இழந்துவிடும்.

இதனால் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள முக்கியமான போட்டியாக இந்த போட்டி அமையவுள்ளது.

அணிவிபரங்களை பொருத்தவரையில் ஹைதராபாத் அணியில் எவ்வித மாற்றங்களும் இன்றைய போட்டியில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், டெல்லி அணிசார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கொலின் மன்ரோ, ஜேசன் ரோய் அல்லது மெக்ஸ்வேல் ஆகிய வீரர்களில் ஒருவர் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<Tamil News Group websites>>