ஈஃபிள் கோபுரத்தை புகைப்படம் எடுக்க முடியாதா?

0
530
photographer can't take Eiffel Tower photos

ஈஃபிள் கோபுரத்தை இரவில் புகைப்படம் எடுப்பது குற்றம். இதில் பல குழப்பங்களும் சிக்கல்களும் உள்ளன. ஆனால், இரவில் பலர் ஈஃபிள் கோபுரத்தை புகைப்படம் எடுக்கின்றார்கள் தான். அதற்கு மறுப்பதற்கில்லை. photographer can’t take Eiffel Tower photos

European Copyright Law சட்டத்தின் படி, ஒருவரால் உருவாக்கப்படும் நினைவுச் சின்னங்கள், அவரின் ஆயுள்காலம் முடியும் வரை பாதுகாக்கப்படுவதோடு, அத்துடன் மேலதிகமாக 70 வருடங்கள் பாதுகாக்க வேண்டும்.

ஈஃபிள் கோபுரத்தினை ‘ப்ளாஷ்’ போட்டு புகைப்படங்கள் எடுத்தால் அதன் புனித தன்மை கெட்டுவிடும் என கருதிய SETE (La Société d’Exploitation de la Tour Eiffel ) இதற்கும் சேர்த்தே தடையை போட்டது.

ஆனால், ஈஃபிள் கோபுரத்தை கட்டிய Gustave Eiffel, 1923 ஆம் ஆண்டு இறந்தார். அதன் பின்னர் 70 வருடங்களை சேர்த்து பார்த்தாலும், 1993 ஆம் ஆண்டுடன் இந்த சட்டம் நிறைவு பெறுகிறது. ஆனால், இப்போதும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

தொலைபேசியில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் கணக்கில் வராது, நீங்கள் தாராளமாய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தொழில்முறை புகைப்படக்கலைஞர்கள், விற்பனையின் பொருட்டு புகைப்படம் எடுப்பவர்கள் என காரணம் கொண்டுள்ளவர்கள் கொஞ்சம் அவதானத்துடன் அனுமதி கேட்டு புகைப்படங்களை எடுங்கள். இல்லையேல் தண்டப்பணம் செலுத்தவேண்டி ஏற்படலாம்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**