மலேசியாவின் நிலவரத்தை நுணுக்கமாக அவதானிக்கும் சிங்கப்பூர் அரசாங்கம்…

0
564
Malaysia situation watching Singapore

(Malaysia situation watching Singapore)

மலேசியப் பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து,  அந்நாட்டில் உள்ள நிலவரத்தை சிங்கப்பூர் அரசாங்கம் நுணுக்கமாக கண்காணிப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும்  இடையில், நீண்டகால, பரந்தளவில் உறவுகள் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும்,  சிங்கப்பூரின் நெருக்கமான நாடு என்பதால்,  மலேசியாவில்  நடக்கும்  நிகழ்வுகள், நேரடியாக, அல்லது மறைமுகமாக  சிங்கப்பூர் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார் அமைச்சர்.

அதுமட்டுமல்லாமல் , மலேசிய அரசாங்கம் மாற்றம் காண்பதால், தற்போது மலேசியாவுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள ஏற்பாடுகள் பாதிக்கப்படுமா என்று அமைச்சர் சான்னிடம் ஒரு கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு அவருடைய பதில் இப்போதைக்கு குறிப்பிட்டுச் சொல்வது சிரமமே என்று கூறியுள்ளார்.

அதோடு, பொருளியல், பாதுகாப்பு, சமூகம், கலாசாரம் போன்ற அம்சங்களில், மலேசியாவின் புதிய அரசாங்கத்துடன், சிங்கப்பூர் அணுக்கமாகப் பணியாற்றும் என்றும் கூறியுள்ளார்.

tags:-Malaysia situation watching Singapore

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**