முதல் தடவையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: போர் அபாயம்…..

0
2238
Iran attacks Israel First Time

Iran attacks Israel First Time

முதன் முறையாக இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளமையானது பெரும் போர் அபாயத்தை தோற்றுவித்துள்ளது.

சிரியாவில் இருந்து நேரடியாக இஸ்ரேலுக்குள் ரொக்கட்டுக்களை ஈரான் ஏவியுள்ளது.

இத்தாக்குதலில் சிரிய பாதிப்புகளே ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக பதில் தாக்குதலையும் நடத்தியுள்ளது.

சிரியாவின் டமஸ்கஸ்ஸில் மீது இஸ்ரேல் விமானங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளன.

ஈரானிய அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா இரத்துச் செய்து சில மணித்தியாலங்களிலேயே , ஈரானின் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானிய படைகள் சுமார் 20 ஆட்டிலறி ரொக்கட்கள் மூலம் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதில் பலவற்றை தமது பாதுகாப்பு உபகரணங்கள் வழிமறித்ததாக இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானங்கள், டமஸ்கஸ்ஸில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவின் ராடார் நிலையங்கள் மற்றும் வான் பாதுகாப்பு நிலைகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இத்தாக்குதலால் அப்பிராந்தியத்தில் போர் வெடிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.