புதிய நகராட்சிக்கு சூட்டப்பட்ட மாவீரனின் நாமம்!

0
852
Hero Arnaud Beltrame name given new municipality Bonnières-sur-Seine

Bonnières-sur-Seine ( Yvelines) நகரில் உள்ள ஒரு நகராட்சிப் பகுதிக்கு, உயிரிழந்த லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame இன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. Hero Arnaud Beltrame name given new municipality Bonnières-sur-Seine
கடந்த மார்ச் 23 ஆம் திகதி Trèbes (Aude) நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பயங்கரவாத தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இதில் லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame, பிணையக்கைதிகளை விடுவிப்பதற்காக தன்னுயிரை பணயம் வைத்து பயங்கரவாதியினை சுட்டுக்கொன்றிருந்தார். இந்த தாக்குதலில் Arnaud Beltrame உயிரிழந்தார்.

அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவரின் நினைவாகவும் அவருடைய பெயரினை Bonnières-sur-Seine இலுள்ள நகராட்சி பகுதி ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், பல்வேறு அரசியல் தலைவர்கள், ஜோந்தாம் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் என 200 பேர்வரை கலந்துகொண்டனர்.

மேலும், இரண்டாம் உலகப்போரின் இறுதி நாளாக நினைவுகூறப்பட்ட வீரர்களுக்கான அஞ்சலி நாளில், குறித்த Arnaud Beltrame எனும் மாவீரனின் பெயர் சூட்டப்பட்ட தூபி திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**