மரணத்தை விரும்பி ஏற்ற விஞ்ஞானி: குடும்பத்தினர் சூழ கருணைக்கொலை

0
1232
David Goodal passes away

David Goodal passes away

104 வயதான அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி David Goodall தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

உடல் நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும் தனது வாழ்க்கை முறை மாறிவிட்டதாகவும் தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும் தெரிவித்து David Goodall தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள கருணைக்கொலை செய்வதை சட்டப்படி அனுமதிக்கும் சுவிஸ் நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றின் அனுமதியைப் பெற்று அங்கு சென்றடைந்தார்.

முதலாக பிரான்ஸ் சென்று அவரது உறவினர்களை சந்தித்த அவர் அதன் பின்னரே சுவிஸிற்கு சென்றிருந்தார்.

சுவிஸின் பெசலில், குடும்பத்தினர் சூழ அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான தூக்க மாத்திரைகள் வழங்கி, மருத்துவர்களின் அனுமதியுடன் அவர் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உளவியல் மருத்துவர் ஒருவர் அடங்கலாக மருத்துவர்கள் குழுவொன்றினால் கருணைக்கொலை செய்யப்பட அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, அந்த செயன்முறையை மருத்துவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

இறப்பதற்கு முதல்நாள் அவர் செய்தியாளர் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார். மிகவும் உருக்கமான தருணமாக இது இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவரது மரணம் பெரும் சர்ச்சைகளையும், விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.