தொலைபேசி விற்பனை மோசடியில் 21 வயது வாலிபர் கைது

0
598
.

(young man arrested phone fraud)

சிங்கப்பூர் கைத்தொலைபேசி விற்பனை தொடர்பான தொடர் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 21 வயது நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கைத்தொலைபேசிகளைத் தன்னிடம் விற்கும்படி கூறி அவர் ஏமாற்றியதாக இருவர் தங்களிடம் புகார் செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்த பிறகு இணைய வங்கிப் பரிவர்த்தனை மூலம் பணத்தை மாற்றிவிடுவதாகக் கூறியிருந்தார்.

அந்தப் பரிவர்த்தனை முழுமை பெற இரண்டிலிருந்து மூன்று நாட்கள் எடுக்கும் என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கைத்தொலைபேசிகளைப் பெற்றுக்கொண்ட பிறகு,  அந்தச் சந்தேக நபர் இணையப் பரிவர்த்தனைகளை நிறைவுசெய்யவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.  அத்துடன் யாரும் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

ஆகவே, இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

tags:-young man arrested phone fraud

most related Singapore news

நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**