நீர்வேலி வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

0
784
tamilnews jaffna neerveli award attack two persone arrest

(tamilnews jaffna neerveli award attack two persone arrest)

நீர்வேலி கோவிலில் இரண்டு பேர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைதான மூன்று பேரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரண்டு இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்போது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான அப்புத்துரை கிரிசன் என்ற இளைஞனின் கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டதுடன் பிறிதொரு இளைஞனான என்பவர் மீது காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறனர்.

அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டியை வாள்வெட்டுக் கும்பல், கோவில் கிணற்றுக்குள் தூக்கி எறிந்துள்ளது.

ஒருவரின் கைபேசியை கோவிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் உடைக்கும் கல்லில் எறிந்து உடைத்துள்ளனர்.

பொலிஸாரல் தேடப்பட்டுவரும் வினோத் என்ற சந்தேகநபர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், இணுவிலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மூவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், அன்றையதினம் அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் பணித்துள்ளார்.

(tamilnews jaffna neerveli award attack two persone arrest)

More Tamil News

Tamil News Group websites :