பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது

0
949
Sri Lankan woman nabbed gold worth Rs.2.6 million

(Sri Lankan woman nabbed gold worth Rs.2.6 million)
சட்டவிரோதமாக டுபாய் நாட்டில் இருந்து பெண்ணொருவரால் எடுத்துவரப்பட்ட 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 12.15 மணியளவில் டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 222 என்ற விமானத்தில் வந்த பெண்ணொருவரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் பயணப் பையில் இருந்து 432 கிராமுடைய சங்கிலி, வளையல், மோதிரம் மற்றும் இன்னும் பல்வேறு தங்க ஆபரணங்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், குறித்த பெண்ணையும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களையும் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Sri Lankan woman nabbed gold worth Rs.2.6 million