இறுதிவரை போராடிய ராஹுல்! : வாழ்வா? சாவா? போட்டியில் வென்றது ராஜஸ்தான்!

0
664
Rajasthan Royals beat Kings xi Punjab 2018

(Rajasthan Royals beat Kings xi Punjab 2018)

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது.

பிளே-ஆஃப் சுற்றை தக்கவைப்பதற்கான அழுத்தத்திற்கு மத்தியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நேற்று பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் இலகுவாக ஓட்டங்களை குவித்தது. பட்லர் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, 10 ஓவருக்கு பின்னர் ஓட்டங்களின் எண்ணிக்கையை பஞ்சாப் அணி படிப்படியாக குறைத்தது.

எனினும் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை ராஜஸ்தான் அணி பெற்றுக்கொண்டது.

ஜோஸ் பட்லர் 82 ஓட்டங்களையும், சஞ்சு செம்சன் 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக குவித்தனர்.

பந்து வீச்சில் என்ரு டை 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் சற்று சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் ராஹுல் மாத்திரம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை குவிக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 143 ஓட்டங்களை பெற்று 15 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ராஹுல் 95 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் கிருஷ்ணப்பா கௌதம் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

<<Tamil News Group websites>>

Rajasthan Royals beat Kings xi Punjab 2018