Queensland Police Station Bomb
குயின்ஸ்லாந்து பொலிஸ் நிலையத்தில் கைக்குண்டுகள் கொண்ட பெட்டியை வைத்துச் சென்ற நபரொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
குறித்த சந்தேகநபர் , செவ்வாய்க்கிழமை காலை , குறித்த பெட்டியை விட்டு விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கொண்டு வந்த பெட்டியில் நான்கு கைக்குண்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் பலர் வரிசையில் காத்திருந்த போதிலும், சந்தேகநபர் நபர் நேரடியாக வரிசையில் முந்திச் சென்று பெட்டியை வைத்து விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன பொருட்கள் சில அதில் இருப்பதாகக் கூறி, அங்கிருந்து தனது சைக்கிளில் தப்பியுள்ளார்.
அவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.