அப்பாவின் வார்த்தைக்காக சினிமாவை விட்டு விலகும் காவிரி நாயகன்

0
582
Leading actor leave cinema industrial latest gossip

(Leading actor leave cinema industrial latest gossip )

சினிமாவில் உள்ள நடிகர்கள் எல்லாம் இப்பொழுது அரசியலை நோக்கி படையெடுக்கின்றார்கள் .இந்நிலையில் வாரிசு நடிகர் ஒருவர் தந்தையை தொடர்ந்து தானும் அரசியலில் குதிக்க போவதாக தகவல் வெளியிட்டுள்ளார்

விராலாயே பல வித்தைகளை செய்யும் அந்த நாயகனை பற்றி சினிமாவில் பல்வேறு சர்ச்சைகள் வலம் வருமாம். நாயகன் தற்போது சிவப்பாக இருக்கும் வானம் படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தை முடித்த பிறகு, நாயகன் அரசியலில் ஈடுபட இருக்கிறாராம். அடுக்கு மொழி வசனங்களை பேசும் நாயகனின் அப்பா, நாயகனை எப்படியாவது அரசியலில் பெரிய ஆளாக்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

சமீபத்தில் கூட தண்ணீர் பிரச்சனையில் நாயகன் கொடுத்த குரலுக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதனால் மகிழ்ச்சியடைந்த நாயகனின் தந்தை, நாயகனை எப்படியாவது சீக்கிரமாக அரசியலில் இறக்கி திட்டம் போட்டு வருகிறாராம்.

வாரிசு நடிகர் தந்தையின் வார்த்தைக்கு ஓகே சொல்லி விட்டாராம் .இதனால் கூடிய சீக்கிரம் நடிப்பை எல்லாம் முட்டை கட்டி விட்டு முழுமூச்சாக அரசியலில் குதிக்க தயாராக இருகின்றாராம்.சிலர் இவர் இதுக்கு சரி பட்டு வர மாட்டார் என கூறுகின்றார் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Leading actor leave cinema industrial latest gossip