Toulouse நகரில், கட்டுமான பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றை தீயணைப்பு படையினர் அகற்றியுள்ளனர்.Found bomb used World War II
‘பிங் நகரம்’ என அழைக்கப்படுகின்ற Ramblas aisles Jean-Jaurès பகுதியில் வைத்து குறித்த வெடிகுண்டு அகற்றப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 4 மணி அளவில், தீயணைப்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
எச்சரிக்கை பட்டி சுற்றி கட்டப்பட்டு, பொதுமக்களை கலைந்து போகும் படி பணிக்கப்பட்டு, வெடிகுண்டு அகற்றப்பட்டது. மேலும், அது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
80cm நீளமும் 30cm விட்டமும் கொண்ட இந்த வெடிகுண்டு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற்பகல் 7 மணி வரை இப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
**Most related Tamil news**
- பிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்!
- அப்பிள் காட்சியறைகளுக்கான விஜயத்தை தடை செய்த பிரான்ஸ் அரசு!
- எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு?
- இணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்!
**Tamil News Groups Websites**