மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவை : முதல் தடவையாக ஜனாதிபதி தலைமையில் இன்று

0
654
first cabinet meeting 8 new ministers

(first cabinet meeting 8 new ministers)
கடந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் முதல் தடவையாக அமைச்சரவை இன்று ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளது.

அநேகமாக அமைச்சரவை ஒன்றுக்கூடல் செவ்வாய் கிழமையே இடம்பெறும்.

எனினும் நேற்று நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக அமைச்சரவை சந்திப்பு இடம்பெறவில்லை என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்றைய தினம் கூடவுள்ள அமைச்சர் கூட்டத்தின் போது நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை தீர்த்துக் கொள்ளுவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேர் அரசாங்கத்தில் இருந்து விலகிய இருந்த நிலையில், நேற்று அவர்கள் எதிர்கட்சி தரப்புடன் இணைந்துக் கொண்டனர்.

அவர்களில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் உள்ளடங்குகிறார்.

அவர் எதிர்தரப்புக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக வேறொருவர் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை