அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம்!

0
623
world xi team vs west indies 2018

(world xi team vs west indies 2018)

மே.தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான கண்காட்சி இருபதுக்கு-20 தொடருக்கான உலக பதினொருவர் அணியின் முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மைதானங்களுக்காக நிதி திரட்டும் முகமாக இந்த போட்டித் தொடர் இம்மாதம் 31ம் திகதி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடருக்கான உலக பதினொருவர் அணியின் வீரர்களின் விபரம் முழுமையாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக இங்கிலாந்து அணியின் மட்டுப்படுத்த போட்டிகளின் தலைவரான இயன் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணிக்குழாமில் இலங்கை வீரர் திசர பெரோ, இந்திய வீரர்களான தினேஸ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தான் வீரர்களான சயிட் அப்ரிடி மற்றும் சொயிப் மலிக், பங்களாதேஷ் வீரர்களான சகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால், நியூஸிலாந்து வீரர்களான லுக் ரோன்சி மற்றும் மிச்சல் மெக்லானகன், ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீட் கான் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

<<Tamil News Group websites>>