இன்றைய ராசி பலன் 07-05-2018

0
642
Today horoscope 08-05-2018

(Today horoscope 08-05-2018 )

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 25ம் தேதி, ஷாபான் 21ம் தேதி,
8.5.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி மாலை 6:48 வரை;
அதன்பின் நவமி திதி, திருவோணம் நட்சத்திரம் காலை 6:06 வரை;
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூசம்
பொது : முருகன், பைரவர் வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
செயல் நிறைவேற தாமதம் ஆகலாம். அனுபவசாலியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. வெளியூர் பயணம் பயன் அறிந்து செல்வது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே !
கடந்த கால முயற்சிக்குரிய பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பின்னடைவு மறையும். லாபம் பன்மடங்கு உயரும். பெண்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

மிதுனம் ராசி நேயர்களே !
மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் தாராளமாக இருக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கடக ராசி நேயர்களே !
நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். அன்றாட பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே !
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பன்மடங்கு பெருகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்கி மகிழ்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்

கன்னி ராசி நேயர்களே !
அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் குடும்ப நலன் கருதி பாடுபடுவர். வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம் ராசி நேயர்களே !
எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். புத்திரரின் நற்செயல் மனதிற்கு மகிழ்ச்சி தரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவும்.

தனுசு ராசி நேயர்களே !
அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. தாயின் அன்பும், ஆசியும் மனதிற்கு ஆறுதல் தரும். உறவினர் வருகையால் செலவு கூடும்.

மகர ராசி நேயர்களே !
தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கும். பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும்.சேமிக்க வாயப்புண்டு. உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம் ராசி நேயர்களே !
உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் உருவாகின்ற குறையை உடனடியாக சரி செய்வது நல்லது. பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. உடல்நிலை ஆரோக்கியம் பெறும்.

மீனம் ராசி நேயர்களே !
குடும்பத்தினர் செயல்பாடு பெருமையளிக்கும். தொழில், வியாபாரத்தில் படிப்படியாக லாபம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக திகழ்வர். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 08-05-2018