மாணவனின் புத்தகப் பையில் விஸ்கி போத்தல்; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

0
1185
Whiskey Bottle student school book bag

(Whiskey Bottle student school book bag)
அனுராதபுரத்திலுள்ள பிரதான தேசிய பாடசாலையொன்றின் மாணவன் ஒருவன், தனது பாடசாலை பையினுள் விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபான போத்தல் ஒன்றை (விஸ்கி) மறைத்து வைத்து, பாடசாலைக்குள் கொண்டு சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பாடசாலைக்கு மதுபானம் கொண்டு சென்றதனை குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

தரம் 9 இல் கல்வி கற்கும் 13 வயதான இந்த மாணவனின் பாடசாலை பையினுள் ஏதோவிருப்பது போன்று காணப்படவே, சந்தேகத்தில் புத்தகப் பையை பரிசோதித்து பார்த்த போது, 10,000 ரூபா பெறுமதியான மதுபான போத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவனிடம் இதுகுறித்து வினவிய போது, தனது நண்பர்களுக்கு காண்பிப்பதற்காக இதனை தனது வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

தனது நண்பர்களுக்கு காண்பித்த பின்னர், அதனைத் திரும்ப எடுத்துச் செல்ல இருந்ததாகவும், இதனை அருந்துவதற்காக எடுத்து வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

எனினும் கைப்பற்றப்பட்ட இந்த விலையுயர்ந்த மதுபான போத்தலை பாடசாலையின் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாணவனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக இவரின் பெற்றோரையும் இன்று பாடசாலைக்கு வரவழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் இந்த மதுபான போத்தலை இவரின் நண்பர்களுடன் சேர்ந்து அருந்துவதற்காக கொண்டு வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றதோடு, எந்தக் காரணமுமின்றி பாடசாலைனுள் மாணவன் ஒருவன் இதனை கொண்டுவருவது குடிப்பதற்கு தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இந்தப் பாடசாலையில் கல்வி தரம் உயர்ந்துளதாகவும், ஆனாலும் ஒழுக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாகவும் பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Whiskey Bottle student school book bag