அதிக ஓட்டங்கள் மற்றும் விக்கட்டுகள் : ஐ.பி.எல். பட்டியலில் யாருக்கு முதலிடம்!

0
639
ipl 2018 points table latest update news Tamil

(ipl 2018 points table latest update news Tamil)

ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு முறையும் அதிக ஓட்டங்களை குவிக்கின்ற வீரருக்கு செம்மஞ்சல் நிறத் தொப்பி (Orange Cap) மற்றும் அதிக விக்கட்டுகளை வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிறத் தொப்பி (Purple Cap) என்பவை வழங்கப்பட்டு வருகின்றது.

இம்முறையும் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது வழங்கப்படவுள்ளது.

இதன்படி இம்முறை குறித்த விருது யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையில் அதிகரித்துள்ளது.

தற்போது நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் இந்திய வீரர்கள் அதிகமாக முன்னேறி வருகின்றனர்.

அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களில், நான்கு இடங்களை இந்திய வீரர்கள் பிடித்துள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலின் முதலிடத்தை 10 போட்டிகளில் 423 ஓட்டங்களை பெற்றுள்ள அம்பத்தி ராயுடு பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்ஸன் பிடித்துள்ளார். இவர் 10 போட்டிகளில் 410 ஓட்டங்களை குவித்துள்ளார். இந்த பட்டியலின் முதல் ஐந்து வீரர்களின் பட்டியிலில் இருக்கும் ஒரே ஒரு வெளிநாட்டு வீரர் இவர்தான்.

இவரை தொடர்ந்து 399 ஓட்டங்களுடன் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தையும், விராட் கோஹ்லி 396 ஓட்டங்களுடன் நான்காவது இடத்தையும், ரிஷாப் பாண்ட் 393 ஓட்டங்களுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதேவேளை அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலின் முதல் ஐந்து இடங்களில் நான்கு இடங்களை இந்திய வீரர்கள் பிடித்துள்ளனர்.

பட்டியலின் முதலிடத்தை 14 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உமேஷ் யாதவ் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை 14 விக்கட்டுகளுடன் மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா பிடித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது இடத்தை ஹைதராபாத் அணியின் சித்தார்த் கௌல் 13 விக்கட்டுகளுடன் பிடித்துள்ளதுடன், நான்காவது இடத்தை அதே அணியைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீட் கான் பிடித்துள்ளார். இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தை 13 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ள மும்பை அணியின் மயாங்க் மார்க்கண்டே பிடித்துள்ளார்.

  • ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலின் முழு விபரம் இதோ…!

<<Tamil News Group websites>>

ipl 2018 points table latest update news Tamil, ipl 2018 points table latest update news Tamil