வெலிக்கடை துப்பாக்கி பிரயோகம்; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

0
708
welikada prison shooting incident

(welikada prison shooting incident Suspects remanded)
வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட தூப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எமில் ரஞ்சன் மற்றும் நியோமால் ரங்கஜீவ ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், வெலிக்கடைச் சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுவரும் விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து அன்றைய தினத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து அங்கிருந்த சிறைக்கைதிகள் 27 பேரை சுட்டுக்கொன்றமை சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எமில் ரஞ்சன் இதன்போது சிறைச்சாலைகள் ஆணையாளராகவும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவும் கடமையாற்றியிருந்தனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; welikada prison shooting incident Suspects remanded