பிரான்ஸில் மீண்டும் பகிஷ்கரிப்பு!

0
677
SNCF strike negotiations failed

பிரதமர் எத்துவா பிலிப்புக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.SNCF strike negotiations failed

பிரதமர் எத்துவா பிலிப் நேற்று, Unsa, CGT, CFDT, SUD-Solidaires மற்றும் FO தொழிற்சங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர் பணி பகிஷ்கரிப்பினால் ஏற்பட்டுள்ள சீரற்ற போக்குவரத்தினாலும், போக்குவரத்து துறையால் வரும் வருமானம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தும் எத்துவா பிலிப் இந்த பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார்.

ஆனால் பிரதமர் எவ்வித மேலதிக சலுகைகள் வழங்குவது தொடர்பாக எதுவும் அறிவிக்காமல், இரு தரப்பையும் ஒருங்கிணைக்க முற்பட்டார். ஆனால் தொழிற்சங்க அமைப்புகள் இதற்கு மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த எத்துவா பிலிப், ‘பேச்சுவார்த்தைகள் முற்றுமுழுதாக முடிவடையவில்லை எனவும் மீண்டும் பேச்சுவார்த்தை வரும் 25 ஆம் திகதி இடம்பெறும்!’ எனவும் குறிப்பிட்டார்.

மேலும் , ‘இந்த ஒரு முன்னேற்றமும் அடையாத பேச்சுவார்த்தையினால் எவ்வித பயனும் இல்லை. வெற்று சந்திப்புக்களால் எவ்வித இலாபமும் இல்லை,’ என CGT தொழிற்சங்க தலைவர் Philippe Martinez தெரிவித்துள்ளார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**