19 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி

0
993
Roy Preston Abuse

Roy Preston Abuse

சக பணியாளரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ரொரண்ரோ முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 49 வயதான ரோய் பிரிஸ்டன் என்ற குறித்த நபர், 2015 ஆம் ஆண்டே இக்குற்றத்தை புரிந்துள்ளார்.

அவர் தனது சகபணியாளரான , டெஸ்டினி டக்லஸ் என்ற யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியுள்ளார்.

முதலில் உடல் அங்கங்களை தொட்ட அவர் பின்னர், அவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இக்குற்றம் நடக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 19 வயதென தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் பணியொன்றின் நிமித்தம் வெளியே சென்றிருந்த வேளையிலேயே குற்றம் புரியப்பட்டுள்ளது.

குறித்த யுவதி எவ்வளவு மறுத்தும் அதை கேட்க மறுத்த சந்தேகநபர் குற்றத்தை புரிந்துள்ளார்.