(Seven Lankans detained Mauritius smuggled abroad)
ஆட்கடத்தற்காரர்களினால் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த சிலர், மொரிசியஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிசெல்ஸ் நாட்டிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டிக்கிரி ஹேரத் குணத்திலக இதுதொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பெருந்தொகையான பணத்தை செலவிட்டு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மொரிசியஸ் நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர்களிடம் அந்த நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட உரிய ஆவணம் இல்லாமையே அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 7 இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டிக்கிரி ஹேரத் குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
More Tamil News
- மன்னாரில் மின்னல் தாக்கம் ; மூன்று வீடுகள் சேதம்
- ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து ; சுற்றுலாப் பயணிகளே அவதானம்
- இரு கட்சிகளிடையே மோதல்; மூவர் தப்பியோட்டம்
- தமிழ் பெண்ணை மிரட்டிய சிங்கள ஊழியர்; யாழ். புகையிரதத்தில் பதற்றம்
- மாணவனின் புத்தகப் பையில் விஸ்கி போத்தல்; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Seven Lankans detained Mauritius smuggled abroad