பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

0
788
Removal illegal alcohol bar Protest Point Pedro

(Removal illegal alcohol bar Protest Point Pedro)
யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத மதுபானசாலையை அகற்றுமாறு கோரி, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பருத்தித்துறைப் பகுதியில் நகரசபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக பல வருடங்களாக மதுபானசாலை இயங்கிவருகின்றது.

குறித்த மதுபானசாலையை அகற்றுமாறு கோரி, இன்று காலை பருத்தித்துறை நகரசபை முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மதுபானசாலை கோவில் பகுதியில் இருந்து 50 மீற்றர் தூரத்திலும் பீட சீலையில் இருந்து 300 மீற்றருக்கும் குறைவான தூரத்திலும் அமைந்துள்ளது.

எனவே, குறித்த மதுபானசாலையை அகற்றுமாறு கோரி பல வருடமாக பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பல தடவைகள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஆனாலும் அரசியல் பின்னணி மற்றும் பணப்பரிமாற்றம் போன்ற சட்டவிரோத நடவடிக்கை காரணமாக இந்த மதுபானசாலை தொடர்ந்தும் இயங்கிவருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Removal illegal alcohol bar Protest Point Pedro