ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?

0
630
rajasthan royals vs kings xi punjab 2018 match news Tamil

(rajasthan royals vs kings xi punjab 2018 match news Tamil)

ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு அணிக்கும் போட்டிகளின் வெற்றி முக்கியமாகியுள்ள தருணத்தில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தங்களது இறுதி வாய்ப்பை நோக்கி இன்று நகர்ந்துள்ளது.

இன்றைய தீர்மானம் மிக்க போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டு அணிகளும் தலா ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் எட்டவாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்நிலையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னுறுவதற்கான வாய்ப்பை தக்கவைப்பதற்கு ராஜஸ்தான் அணிக்கு மிகுதி உள்ள ஒவ்வொரு போட்டிகளின் வெற்றியும் அவசியமாக உள்ளது.இதன்படி இன்றைய போட்டியின் வெற்றி மிக முக்கியமாக அமைந்துள்ளது.

இரு அணிகளும் இம்முறை சந்தித்த முதல் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தக்கவைத்திருந்தது.

இதனால் ராஜஸ்தான் அணிக்கான அழுத்தம் அதிகரித்துள்ளது.

இன்று நடைபெறவுள்ள போட்டியின் அணி விபரங்களை பொருத்தவரையில் பஞ்சாப் அணி யுவராஜ் சிங்கிற்கு பதிலாக மனோஜ் திவாரியை அணியில் இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் ராஜஸ்தான் அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

<<Tamil News Group websites>>