சோனம் கபூருக்கு இன்று டும் டும் டும்! மும்பையில் ஓன்று திரளும் இந்தித் திரையுலகம்

0
1568

(Bollywood Actress Sonam Kapoor Wedding News)

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர் அனில் கபூரின் மக்கள் சோனம் கபூருக்கு இன்று மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தி சினிமா நட்சத்திரங்கள் மும்பையில் ஒன்றுகூடியுள்ளனர்.

சினிமாப் பிரபலங்கள், ஹாலிவுட் நடிகர்கள் என்று திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். திருமணம் நடைபெறவுள்ள ஹோட்டலை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திர குடும்பமாக விளங்கும் கபூர் குடும்பத்தின் திருமணத்தை ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

ஆடைகள், ஆபரணங்கள் என்று நட்சத்திரங்கள் தக தக என ஜொலிக்கவுள்ளனர். மணப்பெண் சோனம் கப்போருக்கு என்று விசேடமாக தயாரிக்கப்பட்ட விலையுர்ந்த புடவை ஏற்கனவே அழகாக நெய்யப்பட்டு மும்பை சென்றடைந்துள்ளது.

மணப்பெண்ணுக்கான வைர நகைகள் அனைத்தும் தயாராக உள்ளது என்றும் என்னும் சில மணி நேரத்தில் மணப்பெண்ணாக வலம் வரும் சோனம் கபூரை காண முழு இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் உள்ளது.

சோனம் கபூர் தனுஷுடன் அம்பிகாவதி என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tag: Bollywood Actress Sonam Kapoor Wedding News