மண்சரிவினால் 87 குடும்பங்கள் பாதிப்பு

0
751
87 families affected landslide

(87 families affected landslide)
ஹல்துமுள்ள கினிகத்கல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவின் காரணமாக 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மண்சரிவின் காரணமாக கினிகத்கல வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹப்புத்தல கல்கந்த என்ற இடத்தில் 14 குடும்பங்கள் தற்போது வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரழந்ததுடன், பலர் காணாமல் போயுள்ளதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது உடைமைகளை இழந்து நிர்க்கதியாகியமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 87 families affected landslide