TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Sports Cricket தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பெங்களூர்

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பெங்களூர்

0
639

(sunrisers hyderabad vs royal challenger bangalore 2018)

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி, சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இன்றைய போட்டியில் பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியின் சொந்த மைதானத்தில் அந்த அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இன்றைய போட்டியை பொறுத்தவரையில் பெங்களூர் அணிக்கு முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது பெங்களூர் அணிக்கு கட்டாயமாகும்.

பெங்களூர் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்புகள் சற்று குறைவாக இருந்தாலும் இந்த போட்டியின் வெற்றி அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் இவ்வருடம் சிறந்த அணியாக காணப்படுகின்றது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் பெரிய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணியை பொறுத்தவரை பார்த்திவ் பட்டேலுக்கு பதிலாக மனன் வோஹ்ரா இணைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் தங்களது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது ஹைதராபாத் அணியின் வெற்றிகள் தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.