பனை வளத்தை பாதுகாக்கக் கோரி வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்

0
700
Palmyra Resources Awareness rally Vavuniya demanding protection

(Palmyra Resources Awareness rally Vavuniya demanding protection)
பனை வளத்தை பாதுகாக்க கோரி வவுனியா நெளுக்குளம் பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

பனை வளத்தைக் காப்போம் என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வை வவுனியா சுயாதீன இளைஞர் அமைப்பு முன்னெடுத்தது.

வவுனியா, நெளுக்குளம் பிள்ளையார் ஆலயம் அருகில் உள்ள பனந்தோப்பு பகுதியில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகின்ற பனை வளம் அழிக்கப்பட்டு வருவதால் நீர்பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிலை ஏற்பட்டு வருவதாகவும் இந்த ஊர்வலத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் பனைவளத்தை காத்து எமது இருப்பை பாதுகாப்போம் என தெரிவித்தே இளைஞர்கள் இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்தொடர்ச்சியாக வடக்கு இளைஞர்கள் பலர் ஒன்று கூடி மன்னார், உயிலங்குளம் பகுதியில் நுங்குத்திருவிழா என்னும் பெயரில் பனைசார் உற்பத்திப் பொருட்கள், பனம்பொருட்களுடன் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Palmyra Resources Awareness rally Vavuniya demanding protection