நிறைவேற்று அதிகார முறையினை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோதில்லை

0
767
cant accept ban president executive power gala goda

cant accept ban president executive power gala goda
சிறப்பு அம்சங்களை கொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்குவதற்கான அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு இல்லை என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்ட அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே உறுதுணையாக காணப்பட்டது.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நான்கு அமைச்சரவை மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இதனால் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனங்களும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர்,

அரசாங்கத்தினை சிறந்த முறையில் கொண்டு நடத்த முடியாத இவர்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை நீக்குவதற்கான அதிகாரம் காணப்படுகின்றதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
cant accept ban president executive power gala goda

More Tamil News

Tamil News Group websites :