ராஹுல் அதிரடி : பஞ்சாப் அணிக்கு புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

0
559

(kings xi punjab vs rajasthan royals)

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கே.எல் ராஹுலின் நிதானமாக ஆட்டத்தின் உதவியுடன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இந்தூர் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ராஜஸ்தான் அணியின் சார்பில் பட்லர் 51 ஓட்டங்களையும், சஞ்சு செம்சன் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் முஜிபுர் ரஹ்மான் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பஞ்சாப் அணி சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ராஹுல் 54 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை விளாசினார்.

இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது.

<<Tamil News Group websites>>

kings xi punjab vs rajasthan royals’ kings xi punjab vs rajasthan royals