இரண்டாயிரத்து 500 கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும்

0
534
two thousand five hundred houses build deputy leader sajith premadasa

two thousand five hundred houses build deputy leader sajith premadasa
கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்பிய பின்னர் சாதாரண மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதே கட்சியின் நோக்கமாகும் என அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

துன்பம் மற்றும் பல்வேறு அவலங்களிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவத்த அவர் விவசாயிகளுக்கு இலவசமாக உர வகைகளை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.

கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்து 500 கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
two thousand five hundred houses build deputy leader sajith premadasa

More Tamil News

Tamil News Group websites :