யானை தாக்கியதில் வயோதிபர் பலி

0
498
ephant attack east province sixty two years old latest

ephant attack east province sixty two years old latest
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரமலை பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் செங்கலடி, குமாரவேலியார் கிராமத்தை சேர்ந்த நா.சங்கரப்பிள்ளை என்ற 62 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் காரமலை பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்புகளை செய்துவரும் நிலையில் அங்கு சென்றபோது காட்டுப்பகுதியில் இருந்த யானை இவரை தாக்கியுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ephant attack east province sixty two years old latest

More Tamil News

Tamil News Group websites :