தள்ளிப்போகும் விஸ்வாசம் பட ஷூட்டிங் : சிவா மீது அதிருப்தியில் ரசிகர்கள்..!

0
814
Viswasam shooting delay fans displeasure,Viswasam shooting delay fans,Viswasam shooting delay,Viswasam shooting,Viswasam

(Viswasam shooting delay fans displeasure)

”விஸ்வாசம்” படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாகத் தள்ளிப்போய், தற்போது மே 7-ஆம் திகதி ஐதராபாத்தில் தொடங்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ”விஸ்வாசம்” படத்தின் அறிவிப்பு, நவம்பர் மாதம் வெளியாகி, ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும், திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிந்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், திரைக்கதை பணிகள் முடிவடையாததாலும், படக்குழுவினர் கன்ஃபார்ம் ஆகாததாலும் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஹீரோயினாக நயன்தாரா, இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமானார்கள்.

அந்தவகையில், பிப்ரவரி 24-ஆம் திகதி ஷூட்டிங் எனக் கூறப்பட்டது. ஆனால், மார்ச் மாதம் 1-ஆம் திகதி முதல் சினிமா ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், மார்ச் 16 முதல் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டதால் ”விஸ்வாசம்”ஷூட்டிங் தொடங்கப்படவேயில்லை. மே 4-ஆம் திகதி ஷூட்டிங் என தகவல் வெளியான நிலையில் அதுவும் நடக்கவில்லை.

படத்தை முடித்து தீபாவளிக்கு வெளியிடுவது சிரம் எனக் கூறப்படும் நிலையில், மே 7-ஆம் திகதி ஐதராபாத்தில் ”விஸ்வாசம்” ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இதற்காக, இன்று அஜித் ஐதராபாத் புறப்பட்டுச் செல்கிறார். ஐதராபாத் ஷூட்டிங்குக்கு பிறகு மும்பையில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.

மேலும், அஜித் படத்துக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட, விஜய் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ஆனால், ”விஸ்வாசம்” படத்தைப் பற்றிய அப்டேட் எதையுமே சொல்லவில்லை என டைரக்டர் சிவா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

குழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..!

தேசிய விருது வழங்கும் நிகழ்வில் ஏமாற்றம் அடைந்த நடிகை பார்வதி..!

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

ஆர்யாவுக்கு அவர் தான் இறுதியில் மணப்பெண்ணா..? : செம கடுப்பில் மக்கள்..!

சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்த நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஷாலின் வில்லத்தனமான ஆசை இது தானாம்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

Tags :-Viswasam shooting delay fans displeasure

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 05-05-2018