சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்த நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0
1302
Srithika plays Suryas mom Kalayanamam Kalyanam serial,Srithika plays Suryas mom Kalayanamam Kalyanam,Srithika plays Suryas mom Kalayanamam,Srithika plays Suryas mom,Srithika plays Suryas

(Srithika plays Suryas mom Kalayanamam Kalyanam serial)

சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் ஸ்ரித்திகா, ”கல்யாணமாம் கல்யாணம்” சீரியலில் ஹீரோ சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

உயரம் குறைந்த இளமையான தோற்றம் கொண்டவரான ஸ்ரித்திகா, ”பிரேமம்” மலர் டீச்சரைப் போலவே, தனது நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர்.

”நாதஸ்வரம்” சீரியலைத் தொடர்ந்து, ”குலதெய்வம்” சீரியலில் நடித்தவர், தற்போது விஜய் டிவியின் ”கல்யாணமாம் கல்யாணம்” சீரியலிலும் அவர் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது கல்யாணமாம் கல்யாணம் சீரியல். தேஜா நாயகனாகவும், ஸ்ரீத்து நாயகியாகவும் நடித்துள்ள இத்தொடரை பிரம்மா இயக்கி வருகிறார். ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் மௌலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காதல், குடும்பம், பாசம், எதிர்ப்பு என உணர்ச்சிகளின் கலவையாக உள்ள இந்தச் சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். இளமையான காதல் கதையை குடும்பப் பின்னணியில் சொல்லி இருப்பதே இந்த சீரியலின் வெற்றிக்கான காரணம்.

சூர்யா, கமலி காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு, இருவருக்கும் வேறு வேறு இடங்களில் திருமண ஏற்பாடு, இதற்கிடையே சூர்யாவின் அம்மாவிற்கு திடீர் ஹார்ட் அட்டாக், சூர்யா – கமலி திடீர் திருமணம் என பரபரப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

ஏற்கனவே சீரியலின் அதிரடி திருப்பங்களால் சுவாரஸ்யமான ரசிகர்களுக்கு, நேற்று திடீர் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது நாதஸ்வரம் ஸ்ரித்திகாவின் திடீர் வரவு. சூர்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் இனி இவர் தான் நடிக்க இருக்கிறார்.

முன்பு சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தவரே நன்கு இளமையுடன் தான் இருந்தார். இந்நிலையில், சூர்யாவுக்கு தங்கை என்று சொன்னால் நம்பி விடலாம் என்றிருக்கும் 31 வயது ஸ்ரித்திகாவை, சூர்யாவுக்கு அம்மாவாக்கி இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன், முன்பு சூர்யாவின் அம்மாவாக நடித்தவர் தனி மிடுக்கோடு காணப்பட்டார். அந்த மிடுக்கான தோற்றம், மென்மையான ஸ்ரித்திகாவிடம் தொடருமா என்பது சந்தேகமே.

எனவே, ஸ்ரித்திகாவின் இந்த திடீர் வரவு இனி வரும் காட்சிகளில் எடுபடுமா என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் போல…!

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

குழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..!

த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

ஆர்யாவுக்கு அவர் தான் இறுதியில் மணப்பெண்ணா..? : செம கடுப்பில் மக்கள்..!

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் தியேட்டரிலேயே மரணம்..!

விஷாலின் வில்லத்தனமான ஆசை இது தானாம்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

Tags :-Srithika plays Suryas mom Kalayanamam Kalyanam serial

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 05-05-2018